அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவது தொடர்பான செய்திகளில் உண்மையில்லை – அமைச்சர் கீதாஜீவன்
அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவது தொடர்பான செய்திகளில் உண்மையில்லை என அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் விளக்கம்.
அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவது தொடர்பாக அங்கன்வாடி பணியாளர்களின் குற்றசாட்டு குறித்து அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவது தற்காலிக ஏற்பாடுதான் என தெரிவித்துள்ளார்.
அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவது தொடர்பான செய்திகளில் உண்மையில்லை. இவை உண்மைக்கு புறம்பான செய்திகள் தான். குறைந்த எண்ணிக்கையில் குழந்தைகள் இருந்தால், குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.