ஆஸ்ரம் பள்ளி வளகத்துக்கான வாடகை முறையாக செலுத்தப்பட்டு வருகிறது. வாடகை பாக்கி உள்ளது என்பதில் உண்மை இல்லை என்று லதா ரஜினிகாந்த் தரப்பில் விளக்கம்.
லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கம் சென்னை கிண்டி பகுதியில் நடத்தி வரும் ஆஸ்ரம் பள்ளி, வாடகை பாக்கி தொடர்பாக பிரச்சினை நீடித்த வந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் இடத்தை காலி செய்வதாக ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கம் ஒப்புக்கொண்டது. இதற்கான வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.
கொரோனா காரணமாக பள்ளியை மாற்ற முடிவில்லை என்றும் மேலும் ஓர் ஆண்டு அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரி சங்கத்தின் சார்பில் லதா ரஜினிகாந்த் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், மாத வாடகையாக டி.டி.எஸ். தொகை உட்பட 8 லட்ச ரூபாய் முறையாக செலுத்தி வருவதாகவும், எனவே கால அவகாசத்தை இந்த கல்வி ஆண்டு முடியும் வரை நீட்டிக்க வேண்டுமென்றும் லதா ரஜினிகாந்த் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆஸ்ரம் பள்ளி வாடகை பாக்கி விவகாரத்தில், அந்தப் பள்ளியை 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதிக்குள் காலி செய்யவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவறினால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பள்ளி தற்போதைய முகவரியில் 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு தடை விதித்தது.
இந்நிலையில், ஆஸ்ரம் பள்ளி வளகத்துக்கான வாடகை முறையாக செலுத்தப்பட்டு வருகிறது. வாடகை பாக்கி உள்ளது என்பதில் உண்மை இல்லை. கொரோனா காரணமாக ஏப்ரல் 2020 காலக்கெடுவுக்குள் வேறு இடத்துக்கு பள்ளியை மாற்ற முடியவில்லை. எங்கள் மனுவை ஏற்று ஏப்ரல் 2021 வரை சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது என்று லதா ரஜினிகாந்த் தரப்பில் விளக்கமளித்துள்ளனர்.
டெல்லி : நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத், தனது இயக்குனராக அறிமுகமாகும் "எமர்ஜென்சி"படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.…
டெல்லி : மக்களவை தேர்தல் மற்றும் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் படியாக 'ஒரே நாடு ஒரே…
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…