மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை கிடையாது …! சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
காவிரி ஆற்றில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தாக்கல் செய்த வரைவு அறிக்கைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் மேகதாது அணைக்கான கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.தமிழக அரசின் சட்டத்துறை ஒப்புதலை அடுத்து மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்தது. மனுவில்அணைக்கு மத்திய நீர் ஆணையம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில் டெல்லியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை கிடையாது. பேச்சுவார்த்தை எனக்கூறிவிட்டு அணைக்கட்ட ஒப்புதல் பெற்றதால் பேச்சுவார்த்தை என்பது அர்த்தமற்றது என்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.