என் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டு, வழக்கும் இல்லை -தமிழிசை சவுந்தரராஜன்
என் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டு, வழக்கும் இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கான பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார்.ஆனால் வேட்புமனுவில் தமிழிசை சவுந்தரராஜன் பல விவரங்களை குறிப்பிடவில்லை.
குறிப்பாக பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் கௌரவ இயக்குனராக இருப்பதையும், தன்னுடைய கணவரின் வருமானத்தையும், தன் மீதுள்ள குற்ற வழக்குகளையும் அவர் குறிப்பிடவில்லை. இதனை திமுகவினர் தேர்தல் அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினார்கள்.
இதன் காரணமாக தேர்தல் அதிகாரிகள் தமிழிசை சவுந்தரராஜனின் வேட்புமனுவை ஏற்கவில்லை. பின்னர் உரிய விளக்கம் அளிக்கப்பட்டு அதன் பின்னர் சரியான தகவல்கள் நிரப்பப்பட்ட பின்னர் மீண்டும் தமிழிசையின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கான பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், எனது வேட்பு மனுவில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் என் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டு, வழக்கும் இல்லை என்றும் கூறியுள்ளார்.நான் நேர்மையான தலைவர், சரியான நேரத்தில் சரியாக வருமான வரி கட்டி வருகிறேன் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.