விளைபொருட்களுக்கு விற்பனை கட்டணம் இல்லை – அவசரச் சட்டம் பிறப்பிப்பு.!
விவசாயிகள் விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்ய வழிவகுக்கும் சட்டத்திருத்தம் – தமிழக அரசு.
விவசாயிகள் வேளாண் பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது. எந்த சூழ்நிலைகளில் விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது என அவசர சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு. தமிழநாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை சட்டத்தில் திருத்தும் செய்து தற்போது அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அவசர சட்டத்தால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பயிரை விற்கலாம். அவசர சட்டத்தால் விளைபொருட்களை தனியார் சந்தை, கிடங்கு, குளிர்பதன மையங்களிலும் விற்பனை செய்யலாம். விளைபொருளை தங்கள் பண்ணை, உணவுபூங்காவில் அங்கீகரித்து வணிகர்களுக்கு நேரடியாக விற்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், விற்பனை குழுக்களின் தனி அலுவலர் பதிவிக்காலத்தை 6 மாதங்கள் நீடித்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 1987 சட்டத்தில் சீர்திருத்தங்கள் செய்ய, விற்பனை குழுக்களின் தனி அலுவலர்களின் பதிவிக்காலத்தை நீடிக்க அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரையின் பேரில், அவசர சட்டத்தை ஆளுநர் பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.