பள்ளியிலும் மற்றும் ஊரிலும் மதமாற்ற முயற்சி இதுவரை நடந்ததில்லை என மைக்கேல்பட்டி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
தஞ்சாவூரில் தங்கி படித்து வந்த அரியலூரை சார்ந்த பிளஸ் டூ மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. மாணவியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகம் மத மாற்ற செய்ய அழுத்தம்தான் காரணம் என கூறப்படுகிறது. ஆனால் இது வெறும் வதந்தி என்றும், பொய்யான செய்திகள் பரப்பப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மைக்கேல்பட்டி கிராம மக்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரில், எங்கள் ஊரில் சுமார் 800 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் அடங்குவர். எங்கள் ஊர் பழமையான ஊர் இந்தநாள் வரையிலும் நாங்கள் மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடனும் ஒரே குடும்பமாக மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்தநாள் வரைக்கும் மத சம்பந்தமாக எந்த ஒரு பிரச்சினையும் நடந்தது இல்லை.
எங்கள் ஊரில் நடைபெறுகின்ற மத சம்பந்தமான திருவிழாக்களில் கொண்டிருக்கின்ற தூய இருதய பள்ளி 163 ஆண்டுகளாக இயங்கி சுமார் 60 சதவீதத்திற்கு மேல் இந்து மதத்தினர் பயின்று வருகின்றனர். அதேபோல் விடுதியில் இந்து மாணவியரே அதிகம் படிக்கின்றனர். இந்த பள்ளியிலும் மற்றும் ஊரிலும் மதமாற்ற முயற்சி இதுவரை நடந்ததில்லை. இந்த சூழ்நிலையில் சில மாணவி லாவண்யாவின் மரணத்தை வைத்து மதரீதியான கட்சிகளும், அமைப்புகளும் எங்களூரில் சகோதரத்துடனும் ஒற்றுமையுடன் மத நல்லிணக்கத்தோடு வாழ்வதை சீர்குலைக்க முயற்சிக்கின்றார்கள்.
நாங்கள் இதை வன்மையாக அமைப்பதையும் கண்டிக்கிறோம். மற்றும் பலதரப்பட்ட குழுக்கள் அமைப்பதையும் விசாரிப்பதையும் தடுத்து நடவடிக்கை எடுக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…