தனியார் பேருந்துகளால், அரசின் எந்தவொரு திட்டங்களும் பாதிக்கப்படாது என அமைச்சர் சிவசங்கர் பேட்டி.
கிராஸ் காஸ்ட் காண்ட்ராக்ட் முறையில் இந்த ஆண்டு 500 பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி வழங்கப் போவதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் இந்த முடிவுக்கு போக்குவரத்து சங்கங்கள் தங்களது கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறது.
அமைச்சர் சிவசங்கர் பேட்டி
இந்த நிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சென்னை மாநகராட்சி தனியார் பேருந்து இயக்கம் தொடர்பான சாதக, பாதகங்கள் ஆய்வு செய்யப்படும். சாதக, பாதகங்கள் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து ஆலோசனை நடத்தி 3 மாதத்தில் உரிய முடிவு எடுக்கப்படும்.
தனியார் பேருந்துகளால், அரசின் எந்தவொரு திட்டங்களும் பாதிக்கப்படாது.அரசு பேருந்துகள் தனியார் மயமாக்கப்படாது. தனியார் பேருந்து விவகாரம் குறித்து அதிமுக ஆட்சி காலத்தில் அரசிதழில் வெளியிடப்பட்டது. நடைமுறையில் இருக்கும் அரசு பேருந்துகள் சேவை நிறுத்தப்பட மாட்டாது.
மாணவர்கள், மகளிர், முதியோர்களுக்கான பேருந்து சலுகைகள் நிறுத்தப்படாது. மாணவர்கள், மகளிர், முதியோர்களுக்கான பேருந்து சலுகைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். நாளையே தனியார் பேருந்துகள் இயக்கம் என்ற பதற்றத்தை ஏற்படுத்துவது தேவையில்லாத செயல். போக்குரத்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் எனவும், இந்த…
சென்னை : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் 2025 தொடரானது தொடங்கவுள்ளது. இந்த தொடர் மார்ச்-14 ம் தேதி…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருமாறும் என வானிலை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று இந்திய…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து உள்ளதால், நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய…