இவங்க மேல மயிரளவு கூட மரியாதையும் இல்ல,பயமும் இல்ல- கமல் வெளியிட்ட ஆவேச வீடியோ
அரசின் அலட்சியத்தால் பல ராகுக்கல்,பல சுபஸ்ரீகள் கொல்லப்பட்டிருக்காங்க என்று கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் ஸ்கூட்டியில் சென்ற போது அவர் மீது பேனர் மேலே விழுந்ததில் கீழே விழுந்தார்.அந்த சமயத்தில் அவர் பின்னே வந்த லாரி அவர் மீதி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.மேலும் சுபஸ்ரீ மரணம் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள்,சினிமா துறையில் உள்ளவர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு இல்லை. இதை நிறுத்தவைப்பது நமது கடமை. அரசின் அலட்சியம் அக்கறையாக
மாற வேண்டும். pic.twitter.com/RQgaiORiHc— Kamal Haasan (@ikamalhaasan) September 20, 2019
அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் சுபஸ்ரீ மரணம் குறித்தும் ,தற்போதைய அரசியல் குறித்தும் பேசிய வீடியோ ஓன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோ பதிவில்,உலகத்திலேயே மிகவும் கொடுமையான விஷயம் என்னவென்று தெரியுமா ?வாழ வேண்டிய பிள்ளைகளின் மரணச்செய்தியை பெற்றோரிடம் சொல்வதுதான்.சுபஸ்ரீயின் மரணச்செய்தியும் அப்படி பட்டதுதான். இந்த மாதிரி அரசின் அலட்சியத்தால் பல ராகுக்கல்,பல சுபஸ்ரீகள் கொல்லப்பட்டிருக்காங்க..கொஞ்சமாவது அறிவு வேண்டாமா? எங்க பேனர் வைக்கணும் வைக்கக்கூடாதுனுமா தெரியாது அவங்களுக்கு..இவர்களை போன்ற அரைவேக்காட்டு அரசியல் வாதிகளால் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட்ட போகின்றது.
எதிர்த்து கேள்வி கேட்டால் ஏறி மிதிப்பேன் என்பதும்,தப்பை தட்டிக்கேட்டால் நாக்கை அறுப்பேன் என்றும் மிரட்டுவதும்தான் இவர்களுக்கு தெரிந்த அரசியல்,இந்த மாதிரி ஆளுங்க மேல எனக்கு மயிரளவு கூட பயமும் இல்ல ,மரியாதையும் இல்ல.ஒருவேளை உங்களுக்கு பயம் இருந்தால் என்னுடைய கையை பிடித்துக்கொள்ளுங்கள்.மக்கள் நீதி மய்யம் அந்த தவறுகளை தட்டிக்கேட்டு தீர்வுகளையும் பெற்றுத்தரும் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார் .