தமிழகம் முழுவதும் இன்று எந்தவித தளர்வு இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.முதலில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பின்னர் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் , தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.அதன்படி, பல்வேறு கட்டுப்பாடுகளும், சில தளர்வுகளுடனும் ஆகஸ்ட் 31 -ஆம் தேதி நள்ளிரவு 12 மணிவரை தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.
மேலும், ஜூலை மாதத்தை தொடர்ந்து, ஆகஸ்ட் மாதத்திலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்தவித தளர்வு இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.எனேவ ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்பதால் ஆகஸ்ட் மாதத்தில் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.இதனால் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழுபொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.இன்று மருந்துக் கடைகள்,மருத்துவமனைகள் மட்டுமே இயங்கும். காய்கறி கடை, மளிகை கடை உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும். மக்கள் வீடுகளில் இருந்து வெளியில் வராமல், முழு பொதுமுடக்கத்திற்கு , முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனஅரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…