திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் கிடையாது – தினேஷ் குண்டுராவ்

திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் கிடையாது என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் அக்கட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், திமுக கூட்டணியில் எந்த பிரச்னையும் கிடையாது என்றும் விரைவில் திமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்து நல்ல முடிவு எட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, திமுக – காங்கிரஸ் இடையே தொடர் பேச்சுவார்த்தை நடத்தியும் கூட இதுவரை தொகுதி பங்கீடு குறித்த முழுமையான ஒப்பந்தம் நிறைவு பெறவில்லை, தொடர்ந்து இரு தரப்பிலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விரைவில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பேட்டியளித்துள்ளார்.
கூட்டணியில் இழுபறி நீடித்து வரும் நிலையில், காங்கிரஸுக்கு 18 லிருந்து 22 வரை தொகுதி ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. வரும் 12ம் தேதி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளதால், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்ய வேண்டும் என்றும் கட்டாயம் உள்ளது. இதனால் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு விரைவில் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
திருடப்படும் தகவல்…சீன சிப்செட் அச்சுறுத்தல்! இந்தியாவில் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டம்?
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025