சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை 100% உறுதியாக உள்ளோம் – முதலமைச்சர் பழனிசாமி
சசிகலா வெளியில் வந்த பிறகு 100 % இணைய வாய்ப்பில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. அதை உச்ச நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு உறுதி செய்தது. பின்னர், 2017ம் ஆண்டு பிப்ரவரி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலா உள்ளிட்ட 3 பேரின் தண்டனை காலம் வரும் பிப்ரவரி மாதம் முடிவடைகிறது. இதனால், சசிகலா விடுதலை குறித்த தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கீழ் கேட்ட நரசிம்மமூர்த்திக்கு, அபராதத்தை செலுத்தினால் சசிகலா ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என சிறை நிர்வாகம் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து சசிகலாவை அதிமுகவில் இணைவது குறித்து பல கருத்துக்கள் வெளியாகி வருகின்றனர். அதில் அதிமுகவினர் சிலர் சசிகலாவை கட்சியில் இணைத்துக் கொள்ள மாட்டோம் எனவும், சிலர் அதை பற்றி தலைமைதான் முடிவு செய்யும் என கூறி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் முதலமைச்சர் பழனிசாமி சசிகலா வருகை குறித்து கூறுகையில்,சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கு வாய்ப்பு இல்லை.சசிகலாவை அதிமுகவில் இணைத்து கொள்ள மாட்டோம் என்பதில் 100% உறுதியாக உள்ளோம். ஜெயலலிதா இருந்தபோது சசிகலா அதிமுக உறுப்பினரே இல்லை .சசிகலாவுடன் இருந்தவர்கள் அதிமுகவில் இணைந்துவிட்டார்கள். ஒரு சிலர் மட்டும் அவருடன் உள்ளனர்.சசிகலா வருகையால் அதிமுகவில் எந்த மாற்றமும் இல்லை.சசிகலா இப்போது அதிமுகவில் இல்லை.அமமுகவில் இருந்தவர்கள் அனைவரும் அதிமுகவில் சேர்ந்துவிட்டனர் .தினகரன் மட்டுமே அமமுகவில் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.