கடைகளுக்கான நேரத்தை குறைத்தும் பலனில்லை.., தொழிலதிபர்கள் ஊரடங்கை தீவிரப்படுத்த கூறினர் -முதல்வர் ..!

Default Image

ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக மருத்துவக் குழுவுடன் நாளை ஆலோசனை நடத்தப்படும். முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும் என முதல்வர் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கு நேரடி ஆய்வு நடத்த பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் ஆய்வு மேற்கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்,  ஆட்சிக்கு வந்த மகிழ்ச்சியைவிட கொரோனாவை கட்டுப்படுத்துவதை மகிழ்ச்சியை தரும். கொரனோ இல்லை என்று சொல்லும் நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள் என தெரிவித்தார்.

தமிழக மக்கள் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும். கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அரசு ஆசிரியர்களுக்கு ஊதியத்தை பாதியாகக் குறைப்பது குறித்து அரசு பரிசீலிக்கிறது என்பது வதந்தி, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக, கல்வித்துறையுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் முடிவு அறிவிக்கப்படும்.

ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக மருத்துவக் குழுவுடன் நாளை ஆலோசனை நடத்தப்படும். முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும். தடுப்பூசி இறக்குமதிக்கு உலகளாவிய டெண்டர் விடப்பட்டுள்ளது. 50 கோடி செலவில் தமிழகத்தில் ஆக்சிஜன், மருந்து உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களின் உயிர்காக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

காய்கறி, இறைச்சிக் கடைகளுக்கான நேரத்தை குறைத்தும் பலனில்லை. கூட்டம் குறைந்தபாடில்லை. பல மாவட்டங்களில் தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்கள்  ஊரடங்கை தீவிரப்படுத்த கூறினார்கள். ஆலோசித்தே முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார். 2.7 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ பணியாளர்களுக்கு நிவாரணம் மற்றும் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுதொழில் நிறுவனங்களுக்கு கடன் சலுகை வழங்க ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருந்துகளைத் கள்ளச்சந்தையில் விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

1212 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளோம். தொழில், தன்னார்வ தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளோம். ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்