இவ்வளவு பெரிய கமிட்டியால் எந்த பயனுமில்லை – கார்த்தி சிதம்பரம்
தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு அதிகளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதால் கட்சிக்கு எந்த பயனுமில்லை என்றுகார்திக் சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் அமைத்துள்ள குழுவால் எந்த பலனும் இல்லை என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி விமர்சனம் செய்துள்ளார். தமிழக காங்கிரஸ் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் நியமிக்கப்பட்ட நிலையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி விமர்சனம் செய்துள்ளார். பெரிய கமிட்டியால் யாருக்கும் எந்த அதிகாரமும் இருக்காது, அதிகாரமில்லாததால் யாருக்கும் பொறுப்பு இருக்காது. 32 துணை தலைவர்கள், 57 பொதுச்செயலாளர்கள், 104 செயலாளர் என யாருக்கும் அதிகாரம் இல்லை என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இவ்வளவு பெரிய கமிட்டியால் எந்த பயனுமில்லை. 32 துணை தலைவர்கள், 57 பொது செயலாளர்கள், 104 செயலாளர்கள் என நியமிக்கப்பட்ட யாருக்கும் எந்த அதிகாரமும் இருக்காது, அதிகாரம் இல்லாததால் யாருக்கும் பொறுப்பு என்பது இருக்காது. @INCTamilNadu
— Karti P Chidambaram (@KartiPC) January 2, 2021