சிலைகளை வைக்க அரசு அருங்காட்சியகத்தில் இடம் இல்லை..!ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு
பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை வைக்க அரசு அருங்காட்சியகத்தில் இடம் இல்லை என கூறிவிட்டனர் என்று சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சமீபகாலமாக சிலை கடத்தல்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.மேலும் குஜராத்தில் உள்ள சாராபாய் கலிக்கோ ஃபவுண்டேஷன் என்ற அருங்காட்சியத்தில் இருந்து மீட்கப்பட்ட சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பிலான ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகளை மீட்டு சென்னைக்கு சமீபத்தில்பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கொண்டு வந்தனர்.
இன்று சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் சோதனை நடத்தி 4 ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட 60 சிலைகளை பறிமுதல் செய்தனர்.இந்த சோதனையை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் செய்து பறிமுதல் செய்தனர்.
இதன் பின்னர் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை வைக்க அரசு அருங்காட்சியகத்தில் இடம் இல்லை என கூறிவிட்டனர். அதிகாரிகள் தங்களது சொந்தபணத்தில் சிலைகளை கொண்டு செல்கின்றனர். இந்த முறை மாற்றப்படவேண்டும்.கைப்பற்றப்பட்ட சிலைகள் அனைத்தும் தொன்மையானவை என்று சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.