தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை-அமைச்சர் தங்கமணி
தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் மின்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,தமிழகத்தில் மின்வெட்டு இல்லை, காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததால் கடந்த 27-ம் தேதி ஒருசில இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது .
மின்மிகை மாநிலமாக தமிழகம் உள்ளது. மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் பொய் பிரசாரத்தை முறியடித்து வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.