நெய்வேலியில் இயங்கி வரும் என்எல்சி நிலக்கரி சுரங்கத்தின் விரிவாக்க பணியின் போது விளைநிலங்கள் பாதிக்கப்பட்டதால், அதனை எதிர்த்து பாமகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வன்முறை ஏற்பட்டது. இதனால் பாமகவினர் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களை நேற்று அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.
அப்போது மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், மக்களுக்காக போராடிய பாமகவை சேர்ந்த 55 பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். அவர்களை காவல்துறையினர் விடுவிக்க வேண்டும். என்எல்சி விவகாரத்தில் சமூக விரோதிகள் நுழைந்ததால் அசம்பாவிதம் ஏற்பட்டது என தெரிவித்தார்.
அடுத்ததாக, அதிமுக கூட்டணியில் பாமக தொடர்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, தற்போது மத்தியில் உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கிறது. 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுடன் இணைந்து தேர்தலை பாமக சந்திக்கும் என குறிப்பிட்டார்.
அதே வேளையில், தமிழகத்தில் பாஜக கூட்டணி வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இல்லை என தெளிவுபடுத்தினார். வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாமக உடன் ஒத்த கருத்து உடைய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என தனது கூட்டணி நிலைப்பாட்டை அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
ராகுல் காந்தி வழக்கு குறித்த கேள்விக்கு சாதாரண அவதூறு வழக்குக்கு, இரண்டு வருட சிறை என்பது அதிகபட்சமானது. மேலும், ராகுல்காந்தி வழக்குக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…