தமிழக அளவிலான பாஜக கூட்டணியில் பாமக இல்லை.! அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு.!

PMK Leader Anbumani Ramadoss - BJP Tamilnadu president Annamalai

நெய்வேலியில் இயங்கி வரும் என்எல்சி நிலக்கரி சுரங்கத்தின் விரிவாக்க பணியின் போது விளைநிலங்கள் பாதிக்கப்பட்டதால், அதனை எதிர்த்து பாமகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வன்முறை ஏற்பட்டது. இதனால் பாமகவினர்  வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களை நேற்று அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.

அப்போது மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், மக்களுக்காக போராடிய பாமகவை சேர்ந்த 55 பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். அவர்களை காவல்துறையினர் விடுவிக்க வேண்டும். என்எல்சி விவகாரத்தில் சமூக விரோதிகள் நுழைந்ததால் அசம்பாவிதம் ஏற்பட்டது என தெரிவித்தார்.

அடுத்ததாக, அதிமுக கூட்டணியில் பாமக தொடர்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, தற்போது மத்தியில் உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கிறது. 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுடன் இணைந்து தேர்தலை பாமக சந்திக்கும் என குறிப்பிட்டார்.

அதே வேளையில், தமிழகத்தில் பாஜக கூட்டணி வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இல்லை என தெளிவுபடுத்தினார். வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாமக உடன் ஒத்த கருத்து உடைய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என தனது கூட்டணி நிலைப்பாட்டை அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

ராகுல் காந்தி வழக்கு குறித்த கேள்விக்கு சாதாரண அவதூறு வழக்குக்கு, இரண்டு வருட சிறை என்பது அதிகபட்சமானது. மேலும், ராகுல்காந்தி வழக்குக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்