பிரதமர் வேட்பாளரை பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை -விசிக தலைவர் திருமாவளவன்
பிரதமர் வேட்பாளரை பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், மம்தா பானர்ஜி மத சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் மாநாட்டை நடத்தினாரே தவிர , பிரதமர் வேட்பாளரை அறிவிக்கும் மாநாட்டினை நடத்தவில்லை. நாடாளுமன்ற தேர்தல் நாளே குறிப்பிடாத போது, பிரதமர் வேட்பாளரை பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.
ஓபிஸ் அவரது வீட்டில் – யாகம் வளர்ப்பார் என்றால் அது குறித்து நாம் எதுவும் கறுத்து கூற முடியாது. ஆனால் அவர் ஒட்டு மொத்த மக்களுக்கும் சொந்தமான தலைமை செயலகத்தில் யாகம் வளர்த்தது அதிர்ச்சியை அளிக்கிறது.இதனை விசிக வன்மையாக கண்டிக்கிறது என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.