விளையாட்டாக பேசியதை இவ்வளவு பெரிதுபடுத்தவேண்டிய அவசியமில்லை – அமைச்சர் பொன்முடி
ஓ.சி. பேருந்து கட்டணம் பற்றி விளையாட்டாக பேசியதை இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டியதில்லை என அமைச்சர் பொன்முடி பேட்டி.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பொறியியல் படிப்புக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது.
பொறியியல் படிப்புக்கான 3-ஆம் கட்ட கலந்தாய்வு அக்.13-ஆம் தேதி தொடங்கும் என்றும், மாணவர்கள் அக்.10-ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சர் பொன்முடி அவர்கள் மகளிர் இலவச பேருந்து குறித்து அவர் பேசியிருந்தது சர்ச்சையான நிலையில், இதுகுறித்து விளக்கமளித்ததால். அவர் கூறுகையில், ஓ.சி. பேருந்து கட்டணம் பற்றி விளையாட்டாக பேசியதை இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டியதில்லை என தெரிவித்துள்ளார்.