கொரோனா மரணத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை -அமைச்சர் ஜெயக்குமார்.!

Default Image

இன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கொரோனா மரணத்தை மறைத்ததற்காக முதல்வர் பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும். கொரோனா மரணத்தை போல கொரோனா கால ஊழல்களும் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்று தெரிவித்ததார்.

இந்நிலையில், இன்று சென்னை சிந்தாதிரிபேட்டையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தபிறகு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,  கொரோனா தொற்று பெரிய சவாலாக இருந்த நிலையில் சீறிய நடவடிக்கையின் அடிப்படையில் அதிக பாதிப்புகள் இருந்த ராயபுரம் மண்டலம் விரைவில் பூஜ்யம் என்ற நிலையை எட்டும் என தெரிவித்தார்.

மேலும்,  திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு  பதிலளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், கொரோனா மரணங்களை மறைக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை. கொரோனா மரணங்களை மறைப்பதால் அரசுக்கு என்ன ஆதாயம்..? எனக் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்