நீட் தேர்வால் 3 மாணவிகள் இறந்ததால் தமிழகத்தில் நீட் தேர்வு கூடாது-வைகோ
நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது வருத்தமளிக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம்.நீட் தேர்வால் 3 மாணவிகள் இறந்ததால் தமிழகத்தில் நீட் தேர்வு கூடாது .கோதாவரியில் இருந்து காவிரிக்கு தண்ணீர் வரும் என்பதெல்லம் கானல் நீராக போய்விடும்.ஹைட்ரோகார்பனுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையிலும் தமிழகத்தில் 274 மையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.