HMPV குறித்து பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

HMPV வீரியமிக்க வைரஸ் அல்ல, வீரியம் குறைந்த வைரஸ் தான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

hmpv Ma. Subramanian

சென்னை :  சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, தற்போது தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னையை சேர்ந்த ஒருவருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் பரவி வரும் HMPV தொற்று பாதிப்பு குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” பரவி வரும் HMPV வைரஸ் குறித்து யாரும் அச்சமடைய வேண்டாம். இந்த வைரஸ் காய்ச்சல் பரவ தொடங்கியது என்ற தகவல் வந்த உடனே நாங்கள் அதற்கான நடவடிக்கைகளை தொடங்கிவிட்டோம்.

இந்த வைரஸ் இன்று நேற்று வந்த ஒரு வைரஸ் அல்ல. தொடர்ச்சியாக 50 ஆண்டுகள் இருந்து வரும் ஒரு வைரஸ் தான். எனவே, இதனைப்பற்றி பெரிய அளவில் நாம் பதட்டபட வேண்டிய ஒரு அவசியமே வேண்டாம். கடந்த 2024-ஆம் ஆண்டு இந்த வைரஸ் பற்றி ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் 700 பேருக்கு மேல் இந்த வைரஸ் தாக்கம் இருக்கிறதா? என சோதனை நடத்தப்பட்டது. அதில் 9 பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டாலும் அவர்கள் இப்போது நலமுடன் இருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரையில், சேலத்தில் ஒருவரும், சென்னையில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலத்தில் பாதிக்கப்பட்டவர் 61 வயதான ஒரு நபர் அவருக்கு ஏற்கனவே, புற்றுநோய், ரத்த அழுத்த நோய் இருக்கிறது. சென்னையில் பாதிக்கப்பட்டவர் 42 வயதுடையவர். இப்போது இருவரும் நலமுடன் இருக்கிறார்கள்.

இந்த பாதிப்பு இருந்தது என்றால் 2 முதல் 3 நாட்களுக்கு இரும்ல் சளி பாதிப்பு இருக்கும். உடல் நலக்குறைவு இருப்பவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும். HMPV தொற்று வந்தால் தனிமையில் இருந்தாலே 3, 4 நாட்களில் தானாகவே குணமாகிவிடும்.  இருந்தாலும், அதிகமாக மக்கள் கூட்டம் இருக்கும் இடங்களில் தனிமனித இடைவெளி விட்டு நடக்கவும், முகவசம் அணிந்துகொள்ளுங்கள்” எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 15042025
Today Live 14042025
Porkodi Armstrong
Women In Space 2025
RIP Director SS Stanley
TN Fisherman
Telangana Govt Inner Reservation