தற்போதுள்ள ஓமிக்ரான் புதிய வகை தொற்று வேகமாக பரவக்கூடிய நிலையில் இல்லை என்பதால் மாநிலஅளவில் பெரிய கட்டுப்பாடு தேவையில்லை. – அமைச்சர் மா.சுப்ரமணியன்.
கொரோனா தொற்று பாதிப்பு குறித்தும், தமிழகத்தில் மருத்துவதுரையின் புதிய பணிகள் குறித்தும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டார்.
சித்த மருத்துவம் :
அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் சித்த மருதுவ பிரிவையும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் மக்கள் நல வாழ்வு மையமும் ஒரே வளாகத்தில் செயல்பட்டால் மக்களுக்கு அதிக பயன் கிடைக்கும் என்ற நோக்கில், கடந்த 2022 -2023 தமிழக அரசு அறிவித்த அறிவிக்கையின் படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்பட்டு வந்த சித்த மருத்துவ பிரிவு இடம் மாற்றப்பட்டு, ஈரோடு மாவட்ட அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே அனைத்து மருந்துகளும் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
புதிய மருத்துவ வளாகங்கள் :
கடந்த 22 மாதத்தில் 24 இடங்களில் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் புதிய கட்டடங்கள் கட்டி அதன் தரம் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதற்கான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துவிட்டார் என குறிப்பிட்டார்.
6 ஆயிரம் கொரோனா பாதிப்புகள் :
அடுத்ததாக பரவி வரும் கொரோனாவின் புதிய வகை ஓமிக்ரான் வைரஸ் தொற்று பற்றி பேசுகையில், இந்த பேரிடர் உலகம் முழுக்க தற்போது இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 2 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல மஹாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா என பல்வேறு மாவட்டங்களில் 200 முதல் 600 வரையில் தொற்று பாதிப்பு இருக்கிறது.
தனிமைப்படுத்துதல் :
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 273 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படி 5,6 நாட்கள் தங்களை தனிமைப்படுத்தி கொண்டு மருந்து சாப்பிட்டு வந்தாலே போதும் சரியாகி விடும் என தெரிவித்தார்.
கட்டுப்பாடுகள் :
முந்தைய கொரோனா தொற்று போல, ஒருவருக்கு வந்தால், அந்த குடும்பத்தில் அனைவருக்கும் வரும் அளவுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தற்போதைக்கு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் என குறிப்பிட்டுள்ளோம். மற்றபடி, மாநிலம் முழுவதும் கட்டுப்பாடு, மாநிலங்களுக்கு இடையான நல்ல உறவை தடுக்கும் வகையில் கட்டுப்பாடு போன்றவை தேவையில்லை என்று குறிப்பிட்டார்.
நோய் எதிர்ப்பு சக்தி :
மத்திய அரசினால் தற்போது தடுப்பூசி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 98 சதவீதம் பேருக்கு முதல்கட்ட தடுப்பூசியும், 95 சதவீதத்தினருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 90 சதவீதத்திற்கு அதிகமானோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. தமிழகத்தில் சமீபத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இணை நோய் இருந்தது அதனால் தான் அவர்கள் உயிரிழந்தார்கள் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், சென்னைக்கு கிழக்கு - வடகிழக்கே சுமார்…
கோவை : நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி திண்டுக்கல் : கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனுத்து, வள்ளிப்பட்டி, கல்வார்பட்டி, கெய்தேயன்கோட்டை,…
சென்னை : அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக பற்றி பேசி வருகிறார். மற்றொரு பக்கம் திமுகவை சேர்ந்த…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த…
ஜெர்மனி : கிருஸ்துமஸ் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மாலை ஜெர்மனியின் மாக்டேபர்க் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் பலரும் சந்தோசமாக தங்களுக்கு…
கேப் டவுன் : மிகவும் நல்ல ஆட்டக்காரர் ஆனால் கோபம் தான் கொஞ்சம் அடிக்கடி வரும் என்கிற வகையில், தென்னாப்பிரிக்கா அதிரடி…