அதிமுகவில் இனி வெற்றிடமே இல்லை.. மாநாட்டிற்கான இலச்சினை வெளியிட்டு இபிஎஸ் உரை!

Published by
பாலா கலியமூர்த்தி

மதுரையில் நடைபெற உள்ள மாநில மாநாட்டிற்கான இலச்சினையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் (தலைமை அலுவலகம்) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. கட்சியின் செயல்பாடுகள், வளர்ச்சி பணிகள் மற்றும் ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள மாநில மாநாடு குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

நாடாளுமன்ற தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், புதிய உறுப்பினர் சேர்ப்பு பணியை துரிதமாக முடிக்க அறிவுறுத்தப்பட உள்ளதாகவும், ஆக.20ம் தேதி நடைபெற உள்ள மாநாட்டிற்கான இலச்சினை எடப்பாடி பழனிசாமி வெளியிடுகிறார் எனவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், அதிமுக சார்பில் ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள மாநில மாநாட்டிற்கான இலச்சினையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.

அதன்படி, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு எனும் இலச்சினையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதன் பின் பேசிய அவர், அடுத்து வரும் தேர்தலுக்கு அடித்தளமாக ஆக20-ம் தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு அமையும். அதிமுக உடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர். தமிழகத்தில்  உறுப்பினர்களை கொண்ட ஒரே கட்சி அதிமுக தான்.

அதிமுகவில் புதிதாக 1.60 கோடி உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். உறுப்பினர் சேர்க்கையில் அதிமுக சாதனை படைத்துள்ளது. எனவே, அதிமுகவில் இனி வெற்றிடமே இல்லை என நிரூபித்துள்ளோம். அதிமுக காட்டுக்கோப்பான இயக்கம் என்பதை நிரூபித்து காட்டிள்ளோம். அதிமுகவை உடைக்கவும், முடக்கவும் சிலர் கண்ட கனவுதான் தற்போது உடைந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

மேலும், மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் புது நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை இரு மாநிலங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. அமைதியாக உள்ள மாநிலத்தை சீர் குலைக்கும் நோக்கில் டிகே சிவகுமார் செயல்படுகிறார் என குற்றசாட்டிய இபிஎஸ், மாமன்னன் படத்தில் தான் முதல்வரின் கவனம் உள்ளதாகவும், தூக்கத்தில் இருந்து திமுக அரசு விழித்துக் கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கேம் சேஞ்சர் படத்தை உதறிய தளபதி விஜய்! காரணம் என்ன தெரியுமா?

சென்னை : பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தின் தோல்வியை தொடர்ந்து மீண்டும் பழையபடி பார்முக்கு இறங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு…

26 minutes ago

மறைந்த குழந்தைக்காக அமைச்சர் கொடுத்த காசோலையை தூக்கி வீசிய தாயார்.!

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர். நேற்று பள்ளிக்கு…

33 minutes ago

தூய மல்லி அரிசியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?.

பாரம்பரிய அரிசிகளில் ஒன்றான தூய மல்லி அரிசியின் மகத்துவம், அதன் ஆரோக்கிய நன்மைக பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…

56 minutes ago

வன்கொடுமை விவகாரம் : ஞானசேகரன் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

சென்னை : அண்ணாபல்கலைகழக வளாகத்தில் டிசம்பர் 23-ஆம் தேதி இரவு மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

1 hour ago

பட்டாசு ஆலை விபத்து – ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம்  சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை வெடி வெடி விபத்தில் 6…

1 hour ago

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இடம்பெற்ற 6 இந்திய வம்சாவளியினர்!

நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…

3 hours ago