எந்த தளர்வும் கிடையாது ! நாளை இந்த இடங்களில் முழு பொது முடக்கம்
சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நாளை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதால், ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது மதுரை மற்றும் தேனியில் ஒரு சில இடங்களிலும் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஜூன் 21, 28 ஆகிய இரு ஞாயிற்று கிழமைகளில் எந்த தளர்வுமின்றி பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.எனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மதுரை மற்றும் தேனியில் ஒரு சில இடங்களிலும்நாளை முழு பொதுமுடக்கம் அமலில் இருக்கும்.