வன்னியர்களுக்கான 10.5 % இட ஒதுக்கீடில் முழுமையான தரவுகள் இல்லை என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கருத்து.
விழுப்புரம் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம், சமூக நீதி என்று கூறுகின்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இடஒதுக்கீடு விவகாரத்தில் கவனம் செலுத்தாமல் இருக்கிறா அல்லது திட்டமிட்டு காலம் தாழ்த்துகிறாரா என்று தெரியவில்லை. சமீபத்தில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், 2 முக்கிய பகுதி என்பது உள்ளது. அதில், மாநில அரசுக்கு இடஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளது என தெரிவித்தார்.
10.5 சதவீத இட ஒதுக்கீடில் முழுமையான தரவுகள் இல்லை. 30 ஆண்டு காலத்திற்கு முன் எடுக்கப்பட்ட அம்பா சங்கர் குழுவின் சாதிவாரிக் கணக்கெடுப்பு இப்போது ஏற்கக் கூடியதல்ல என்று தெளிவாக சொல்லியுள்ளது. மதுரை உயர் நீதிமன்றத்தில் முழுமையாக தரவுகள் அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்படவில்லை என குற்றசாட்டினார். மேலும் தமிழகத்தில் மின்வெட்டு குறித்து தமிழக அரசை விமர்சித்தார். இதனைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திடம், தற்போது மாவட்ட செயலாளராக உள்ளீர்கள், மாநில பொறுப்பு கேட்கப்பட்டதாக தகவல் வருகின்றதே என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, இருக்கிற பொறுப்புக்கே வேலை இல்ல, இதுல மாநில பொறுப்பு வேற என்று விரக்தியில் பதிலளித்தார்.
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…
இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…