நீட் தேர்வு குறித்த நடிகர் சூர்யாவின் கருத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.இதற்கு இடையில் தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அவரது அறிக்கையில்,நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்கியது.கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழக்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது” என்று கூறியிருந்தார்.சூர்யாவின் கருத்துக்கு ஆதரவாகவும் ,எதிராகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
எனவே நீதிமன்ற நடவடிக்கையை விமர்சித்த நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, நீதிபதி சுப்பிரமணியம் கடிதம் எழுதினார்.இதன் பின் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு முன்னாள் நீதிபதிகள் 6 பேர் கடிதம் எழுதினர்.முன்னாள் நீதிபதிகளான சந்துரு ,பாஷா ,சுதந்திரம்,கண்ணன்,ஹரிபரந்தாமன் ,அக்பர் உள்ளிட்டோர் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில்,சூர்யாவின் அறக்கட்டளை மூலமாக நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் கல்வி முடித்து நல்ல வேலைவாய்ப்பை பெற்றுள்ள நிலையில், சூர்யா மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பெருந்தன்மையாக விட்டுவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில்,நீட் தேர்வு குறித்த நடிகர் சூர்யாவின் கருத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை .சூர்யாவின் கருத்தை நீதிபதிகள் பெரிதாக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…
சென்னை : நாதகவில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை…
சென்னை : தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, …
சென்னை : சின்னத்திரையில் இருந்து இப்போது முன்னணி நடிகராக வளர்ந்து இருக்கும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறது.…