ஆளுநர் உரை இல்லை, அது ஆளுங்கட்சியின் உரை – ஸ்டாலின் அதிரடி டுவிட்.!

- ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டு , ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
- ஆளுநர் உரையின் 56பக்கத்தையும் திருப்பிப் பார்த்தேன். சொல்வதற்கு உருப்படியாக ஒன்றுமில்லை என ஸ்டாலின் கூறியுள்ளார்.
வருடந்தோறும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரின் போது ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் தான் இந்த வருடமும் முதல் கூட்டத் தொடர் நேற்று நடைபெற்றது.
இந்த வருட முதல் கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.அப்போது அரசின் திட்டங்கள் குறித்து பேசினார். ஆனால் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டு , ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஆளுநர் உரையின் 56பக்கத்தையும் திருப்பிப் பார்த்தேன். சொல்வதற்கு உருப்படியாக ஒன்றுமில்லை!
எடப்பாடி பழனிசாமி எழுதிக் கொடுத்த சுயபுராணத்தை ஆளுநர் வாசித்திருக்கிறார்.
இது ஆளுநர் உரையல்ல, ஆளும்கட்சியின் உரை. நல்ல நகைச்சுவை உரை. பேரவையையும் நாடக மேடை ஆக்குவதை நிறுத்துங்கள்! pic.twitter.com/mT0we6CB9X
— M.K.Stalin (@mkstalin) January 6, 2020
இந்நிலையில் ஸ்டாலின் தனது டுவிட்டர் ஒரு பதிவு பதிவிட்டு உள்ளார்.அதில் “ஆளுநர் உரையின் 56பக்கத்தையும் திருப்பிப் பார்த்தேன். சொல்வதற்கு உருப்படியாக ஒன்றுமில்லை, எடப்பாடி பழனிசாமி எழுதிக் கொடுத்த சுயபுராணத்தை ஆளுநர் வாசித்திருக்கிறார்.இது ஆளுநர் உரையல்ல, ஆளும்கட்சியின் உரை. நல்ல நகைச்சுவை உரை. பேரவையையும் நாடக மேடை ஆக்குவதை நிறுத்துங்கள்” என பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025