மதம் பார்ப்பவர்களுக்கு புதுக்கோட்டை ஹோட்டலில் சாப்பாடு கிடையாது !

மத்தியப்பிரதேசத்தில் இந்து மதத்தை இல்லாதவர் ஒருவர் உணவை டெலிவரி செய்ததாக கூறி அந்த உணவை ரத்து செய்த நபருக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றன.
இதற்கு பதில் அளித்த சோமாட்டோ நிறுவனம் “உணவுக்கு மதம் கிடையாது.உணவே ஒரு மதம் தான்” என கூறியுள்ளது. சோமாட்டோ நிறுவனத்தின் இந்த பதிலுக்கு பலர் ஆதரவு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து புதுக்கோட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் மதம் பார்ப்பவர்களுக்கு இங்கு சாப்பாடு கிடையாது என அறிவிப்பு பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்று இடங்களில் ஓட்டல் மற்றும் காபி பார் நடத்தி வரும் அருண்மொழி என்பவர் தனது ஹோட்டலில் மதம் பார்ப்பவர்களுக்கு சாப்பாடு கிடையாது என எழுதி வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து அருண்மொழி கூறுகையில் “ஜாதி , மதங்களுக்கு அப்பாற்பட்டது தான் உணவு. அதில் மதம் பார்ப்பவர்களுக்கு எனது ஹோட்டலில் சாப்பாடு இல்லை என விளம்பரம் செய்துள்ளேன் என கூறினார். இதனையடுத்து அருண்மொழியின் இந்த அதிரடி முடிவுக்கு பலர் தங்களது பாராட்டுக்களை கூறி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025