மீன் கிடையாது, வலை தரலாம்-சிதம்பரத்தை கேலி செய்யும் ஹெச்.ராஜா
மீன் கிடையாது. வலை தரலாம் என்று சிறையில் உள்ள சிதம்பரத்தை கேள்வி செய்து ஹெச்.ராஜா ட்வீட் செய்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக இடைக்கால ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது .உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்குமாறு ப.சிதம்பரம் கோரிக்கை விடுக்கப்பட்டது.ஆனால் உடல்நிலையை காரணம் காட்டி தொடரப்பட்ட இடைக்கால ஜாமின் மனு நிராகரித்தது டெல்லி உயர்நீதிமன்றம். சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு கொசுவலை கொடுக்கவும், வாரம் ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்யவும், மாஸ்க் வழங்கவும் உத்தரவு பிறப்பித்தது.
மீன் கிடையாது. வலை தரலாம். சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடையாது அதற்கு பதிலாக சிறையில் கொசுவலை கொடுக்க நீதிமன்றம் உத்தரவு.
— H Raja (@HRajaBJP) November 3, 2019
இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், மீன் கிடையாது. வலை தரலாம். சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடையாது அதற்கு பதிலாக சிறையில் கொசுவலை கொடுக்க நீதிமன்றம் உத்தரவு என்று சிதம்பரத்தை கேள்வி செய்துள்ளார்.