டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் எந்த தொய்வும் இல்லை…!அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் எந்த தொய்வும் இல்லை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில்,டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் எந்த தொய்வும் இல்லை. டெங்கு கொசுவை ஒழிக்கும் நடவடிக்கைக்காக 300 வீடுகளுக்கு ஒரு சுகாதார அலுவலரை நியமித்து ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதேபோல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நில வேம்பு கசாயம் கொடுக்கப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில், டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் 90 சதவிகிதம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.