நிதியுதவி தருவதில் எந்த பாரபட்சமும் இல்லை – மறைந்த காவலருக்கு மரியாதை செலுத்திய டிஜிபி.!

Default Image

நெல்லை சரக டிஜிபி அலுவலகத்தில் காவலர் சுப்பிரமணியன் படத்துக்கு டிஜிபி திரிபாதி மலர்தூவி மரியாதையை செலுத்தினார்.

தூத்துக்குடியில் கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த மேலமங்கலகுறிச்சியை சேர்ந்த துரைமுத்து என்பவரை கைது செய்வது தொடர்பாக, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.முருகப்பெருமாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அத்தனிப்படைக்குக் கிடைத்த தகவலின்படி, காவல்துறையினர் நேற்று மணக்கரை சந்திப்புக்கு விரைந்தனர். அப்போது, காவல்துறையினர் வருகையை அறிந்த துரை முத்து மற்றும் அவரது சகோதரன், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

அப்போது துரைமுத்து, தான் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றை காவல்துறையினர் மீது வீசியுள்ளார். இதில், ஆழ்வார்திருநகரி காவல் நிலைய முதல் நிலைக் காவலர் திரு.சுப்பிரமணியன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், நெல்லை சரக டிஜிபி அலுவலகத்தில் காவலர் சுப்பிரமணியன் உருவப்படத்துக்கு டிஜிபி திரிபாதி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் பேசிய டிஜிபி, போலீசாருக்கு நிதியுதவி தருவதில் எந்த பாரபட்சமும் இல்லை என்றும் வழக்குகள், சம்பவங்களின் அடிப்படையில் போலீஸ் குடும்பத்துக்கு இழப்பீடு அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். ஒரு சில சம்பவங்களை வைத்து தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் அதிகரித்திருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. போலீசாருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இன்னும் பயிற்சிகள் அதிகரிக்கப்பட வேண்டியுள்ளது கூறியுள்ளார். இதனிடையே முதல்வர் பழனிசாமி மறைந்த காவலருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தருவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்