“தர்பூசணியால் எந்த ஆபத்தும் இல்லை.., பழம் விற்பவர்கள் எங்களுக்கு எதிரி இல்லை” – உணவு பாதுகாப்புத்துறை.!

தமிழகத்தில் விளையக்கூடிய தர்பூசணி பழங்களை தாராளமாக உண்ணலாம் என்று சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஸ் விளக்கம் அளித்துள்ளார்.

Watermelon - sathish kumar

சென்னை : கோடை காலத்தில் கொளுத்தும் வெயியிலின் தாக்கத்தின் காரணமாக உடல் சூட்டை தணிக்க பொதுமக்கள் தர்பூசணி பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள. ஆனால், கடந்த சில நாட்களாக தர்பூசணியில் ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

இதையடுத்து, தர்பூசணியில் ரசாயனம் கலப்பதாக பரவும் வதந்தியால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். ஒரு கிலோ தர்பூசணியை வியாபாரிகள் 2 ரூபாய்க்கு கேட்பதாக வேதனையடைந்துள்ளனர். மேலும், விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கி பொதுமக்களிடம் கூடுதல் விலைக்கு விற்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

பின்னர், தர்பூசணி தொடர்பான அர்த்தமற்ற வதந்திகளால் உழவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், தர்பூசணி பழம் குறித்து மக்களிடம் நிலவும் அச்சத்தை அரசு போக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார், ”தர்பூசணியில் ரசாயனம் கலக்கப்படுவதாக வெளியான வதந்திகளை நம்ப வேண்டாம். பொதுமக்கள் அச்சமின்றி தர்பூசணி பழங்களை சாப்பிடலாம், உடலுக்கு ஆரோக்கியமானது. தர்பூசணியில் கலப்படம் இல்லை, ஆனால் கெட்டுப்போன பழங்கள், எலி கடித்தவற்றை மட்டுமே அழித்தோம்.

எல்லா விவசாயிகளும் தர்பூசணியில் ரசாயனம் கலப்பதாக நாங்கள் கூறவே இல்லை, சென்னையில் தர்ப்பூசணி பழத்தில் ரசாயன கலர் கலப்பு செய்யப்படுவது உறுதி செய்யப்படவில்லை. சந்தேகம் வந்தால், ஒரு டிஷ்யூ பேப்பரை பழத்தின் மீது ஒத்தி எடுத்து பார்க்கவும், அதில் அதிகப்படியான நிறம் ஒட்டியிருந்தால் அது நிறமேற்றப்பட்ட பழம்.

குறைவான அளவு நிறம் இருந்தால் அது நல்ல பழம். இதுகுறித்து நாங்கள் தொடர் சோதனை நடத்துகிறோம், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். பழம் விற்பவர்கள் எங்களுக்கு எதிரி இல்லை. நான் கார்ப்பரேட் நிறுவனத்துக்கு ஆதரவாகசெயல்படவில்லை” என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்