போலியோ போல் கொரோனா இல்லை – ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

போலியோவை போல் கொரோனா ஒழிக்கப்பட்ட நோய் அல்ல என்று மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், போலியோவை போல் கொரோனா ஒழிக்கப்பட்ட நோய் அல்ல என்பதை மக்கள் உணர்ந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும். கடலூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தான் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது என்றும் டெங்குவால் இந்தாண்டு மூன்று பேர் உயிரிழந்தனர் எனவும் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் போல, அவர்களால் மற்றவர்களும் பாதிப்படைவார்கள், தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என வலுயுறுத்தினார். தமிழகத்தில் 20 லட்சம் பேர் 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாதது சவாலாக இருக்கிறது. 32,017 இடங்களில் 5வது தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. 48.6 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. மேலும் 7 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளன என கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025