கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை – வைத்திலிங்கம் பேட்டி..!

தலைமைச்செயலகத்தில் காணொலி காட்சி மூலமாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவில்லை.
இதைத்தொடர்ந்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உடனான ஆலோசனைக்குப் பின் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேட்டியளித்துள்ளார்.
அதில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவருக்கும் எனது ஆதரவு உண்டு. கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை. ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே எந்த குழப்பமும் இல்லை.
செயற்குழுவில் நடைபெற்ற விவாதம் கட்சி வளர்ச்சிக்கானது. தமிழகத்தில் ஆட்சியை தக்க வைப்பதே குறிக்கோள் என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.