#BREAKING: 9,10,11-ம் வகுப்புக்கு எந்த தேர்வும் கிடையாது..பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

9,10,11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது என கண்ணப்பன் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் தேர்ச்சி என அறிவித்தார்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று ஒரு சுற்றறிக்கையில் 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வை நடத்தி மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும், ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் செய்முறை தேர்வை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, 9,10,11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது என பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார். முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெற முதன்மை கல்வி அதிகாரிக்கு கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
மெல்ல விடை கொடு மனமே…CT-தொடரிலிருந்து வெளியேறிய இங்கிலாந்து…கண்ணீர் விடும் வீரர்கள்!
February 27, 2025
AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்
February 26, 2025
ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!
February 26, 2025
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025