#BREAKING: கோவிலில் மாற்றுத்திறனாளி திருமணத்திற்கு கட்டணம் இல்லை – அமைச்சர் சேகர் பாபு..!

Default Image

சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பல அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அதன்படி,

  • மணமக்களில் ஒருவர் மாற்று திறனாளியாக இருக்கும்பட்சத்தில், அந்த திருமணத்தை கோயில்களில் நடத்தக் கட்டணம் இல்லை.
  • கோயில்களில் மொட்டை அடிக்க இனிக் கட்டணம் இல்லை.
  • திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் கோவிலில் முழு நேர அன்னதான திட்டம் செப் 17ம் தேதி முதல் செயல்படுத்தப்படும்.
  • இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 10 இடங்களில் கலை, அறிவியல் கல்லூரி அமைக்கப்படும். சென்னை உட்பட 10 இடங்களில் ரூ.150 கோடியில் கலை, அறிவியல் கல்லூரி அமைக்க நடவடிக்கை.
  • சூரிய ஒளி வெப்ப விளக்குகள் தேவைப்படும் அனைத்து கோவில்களிலும் பொருத்தப்படும்.
  • சென்னை வடபழனி முருகன் கோவில் இடத்தில் ரூ.2 கோடி செலவில் பன்னோக்கு கட்டடம் கட்டப்படும்.
  • திருக்கோவில் யானைகளுக்கு மாதம் இருமுறை மருத்துவ பரிசோதனைகள் செய்து, மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவ வசதி, உணவு, குளியல் வளாகம், நடைபயிற்சி வசதி மற்றும் தேவையான அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்படும்.
  • திருச்செந்தூர் முருகன் கோவிலில் 150 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • அர்ச்சகர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
  • தைத்திங்கள் முதல் நாள் அர்ச்சகர்கள் பூசாரிகள் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்படும் என அறிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்