தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் !மாற்றம் எதுவும் கிடையாது -அமைச்சர் செங்கோட்டையன்
புதிய கல்வி வரைவு கொள்கைக்கான திட்டத்திற்கு கஸ்தூரி ரங்கன் தலைமையில் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது.
நேற்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்திடம் புதிய கல்வி வரைவு கொள்கைக்கான திட்டத்தை ஒப்படைத்தது.
பின் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் புதிய கல்வி வரைவு கொள்கையை வெளியிட்டது.இந்த புதிய கல்வி வரைவு கொள்கை 484 பக்கங்கள் கொண்டுள்ளது.
இந்நிலையில் புதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டது.
இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதற்கு மத்தியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.அதில், தமிழகத்தில் இருமொழி கொள்கை தொடரும் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். 2 மொழி கொள்கைதான் தொடர வேண்டும் என்று மத்திய அரசிற்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். 3-வது மொழியை மத்திய அரசு வலியுறுத்தியபோது மாநில அரசின் நிலை குறித்து கடிதம் எழுதினோம் என்றும் தெரிவித்துள்ளார். 12 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டம் நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது.