#BREAKING: பொதுத்தேர்வு தள்ளிப்போக வாய்ப்பு இல்லை-அமைச்சர் அன்பில் மகேஷ்..!

Default Image

10, 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பதால் அவர்கள் மட்டும் தினமும் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடரும். பொதுத்தேர்வு என்பதால் 10 12ஆம் வகுப்பு மாணவர்களை மட்டும் தினமும் பள்ளிக்கு வரும்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா குறைந்ததும் மற்ற மாணவர்களுக்கும் சுழற்சிமுறை வகுப்புகள் கைவிடப்படும்.

இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் 8.75 லட்சத்திற்கும் மேல் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் மட்டுமே அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு கடந்த ஆண்டு போலவே மார்ச் ஏப்ரலில் நடைபெறும், தள்ளிப்போக வாய்ப்பு இல்லை. பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாள் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் தெரிவித்தார்.

இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் புதிதாக 5.80 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர் சேர்ந்துள்ளனர். மாணவர்கள் புகார் தெரிவிக்க 1098, 14417 ஆகிய உதவி எண்கள் குறித்த அறிவிப்பு அனைத்து வகுப்புகளிலும் ஒட்டப்படும். 2.65 லட்சம் ஓலைச்சுவடிகள் ஸ்கேன் செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்