அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை..விஜய் தனியாக தான் போட்டியிடுவார் – பிரசாந்த் கிஷோர்

பீகாரில் விஜய்க்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது எனவே அவர் எனக்கு பீகாரில் உதவி செய்யவுள்ளதாக உறுதியளித்துள்ளார் என அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

tvk admk

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது கட்சியின் மாநாட்டை நடத்தினார். அதன்பிறகு கட்சி தொடங்கி 1 ஆண்டுகள் நிறைவடைந்த விழாவும் சமீபத்தில் நடத்தப்பட்டது. சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் விஜயின் அரசியல் செயல்பாடுகளும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

குறிப்பாக, சமீபத்தில் கூட  தவெக தலைவர் விஜய்யை, அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசியிருந்தார். தமிழகத்தில் த.வெ.கவுக்கு 15 % முதல் 20 % வரை வாக்குகள் கிடைக்கும் எனவும் பிரசாந்த் கிஷோர்  கூறியிருந்ததாகவும் கூறப்பட்டது.  இது ஒரு புறம் இருக்க மற்றொரு பக்கம் எந்த கட்சியுடன் விஜய் கூட்டணி அமைக்க போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் எழுந்தது.

விஜய் அதிமுக பற்றி பெரிதாக விமர்சனம் செய்து பேசவில்லை என்ற காரணத்தால் அவர் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவியும்  வந்தது. இந்த சூழலில், அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசும்போது  2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தனித்து போட்டியிடவுள்ளதாக முக்கியமான தகவலை பகிர்ந்துகொண்டார்.

இது குறித்து பேசிய அவர் ” நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய் கூட்டணி அமைத்து போட்டியிடமாட்டார். தனித்து போட்டியிடுவார். அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புகள் குறைவு தனித்து போட்டியிட தான் அவர் முடிவு செய்திருப்பதாக நான் நினைக்கிறேன். விஜய் கூட்டணி அமைக்க அதிமுக விரும்புகிறது. ஆனால், விஜய் அந்த எண்ணத்தில் இல்லை. எனவே, அவர் தனித்து போட்டியிட்டு ஆட்சி அமைப்பார்” எனவும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து பேசிய அவர் ” விஜய்க்கு பீகாரில் ஆதரவு அதிகம். எனவே, நான் அவரிடம் பேசியபோது எனக்கு பீகாரில் உதவி செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்” எனவும் பிரசாந்த் கிஷோர் பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்