தமிழ்நாடு, தமிழகம் இரண்டு வார்த்தைகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.- தமிழிசை சௌந்தராஜன்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் பல்வேறு அரசியல் கருத்துக்களை குறிப்பிட்டார். அவர் பேசுகையில், டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால், துணைநிலை ஆளுநர் முடிவெடுக்க அதிகாரம் இல்லை என குறிப்பிட்டது குறித்து கேட்கப்பட்டது .
அதற்கு தமிழிசை, ‘ துணை நிலை ஆளுநர் இருக்கும் மாநிலங்களில் முதல்வர்கள் அப்படி தான் கூறுகிறார்கள். துணை நிலை ஆளுநராகிய நாங்கள் எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என நினைத்து செயல்படுகிறோம். கையெழுத்திட ஒரு கோப்பு வந்தால் , அதில் உள்ள திட்டங்கள் மக்களுக்கு பயன்படுமா என பார்க்கிறோம் என குறிப்பிட்டார்.
மேலும் பேசுகையில், தமிழ்நாடு, தமிழகம் இரண்டு வார்த்தைகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தமிழ்நாடு என்ற பெயர் பல தலைவர்களின் போராட்டங்களுக்கு பிறகு கிடைத்தது. அதனால் தமிழ்நாடு என்ற பெயரை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. என குறிப்பிட்டார். நல்ல கருத்தை யார் சொன்னாலும் நான் ஏற்பேன் எனவும் தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…