நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதால் ஒரு பலனும் இல்லை மோடிக்கு மம்தா கடிதம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டம் ஜூன் 15-ம் தேதி டெல்லியில் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் மத்திய அரசின் அமைச்சர்கள் என பல்வேறு தரப்பில் இருந்தும் ஒரு பெரிய அளவிலான கூட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க போவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் வாயிலாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தெரிவித்து உள்ளார்.
அக்கடிதத்தில் அவர் கூறுகையில் மாநிலங்களுக்கு உதவி செய்யும் அதிகாரமும் இல்லாத நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை எனவும், இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதால் எந்தவிதமான பலனையும் அளிக்கப் போவதில்லை என கூறியுள்ளார்.