அண்ணாமலை இயேசுநாதர் இல்லை..! ஆனால் யூதாஸ் தான் என்பது தமிழக மக்களுக்கு தெரியும் – அமைச்சர் மனோ தங்கராஜ்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான் இயேசு நாதர் இல்லை என்பதை கூறி விட்டார். ஆனால் நிச்சயமாக யூதாஸ் தான் என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக முதல்வர் தான் மத அரசியல் செய்கிறார், பாஜக செய்யவில்லை. தீபாவளிக்கு வாழ்த்து சொல்லமாட்டேன், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லமாட்டேன். இதுதான் திமுக அரசு. ஆனால், பாஜக அனைத்து மதத்தினரின் பண்டிகைக்கும் வாழ்த்து தெரிவித்து, அனைத்து மதத்தினரும் ஒன்று என ஏற்கிறோம்.
முதன் முதலாக விநாயகர் சதுர்த்திக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் பேரறிஞர் அண்ணா. இப்பொழுது இருக்கின்ற தமிழகத்தின் முதலமைச்சர் வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை. இது கண்டனத்திற்கு உரியது. ஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னத்தை காட்ட நான் இயேசுநாதர் கிடையாது. என்னை அடித்தால் நான் திரும்பி அடிப்பேன். இருமடங்காக அடிப்பேன்.
மரியாதையான ஆரசியலை திமுக செய்தால், நானும் அதை செய்வேன். நாளையே என்னுடைய தோட்டத்தில் விவசாயம் செய்து நான் பிழைத்துக் கொள்வேன். முதலமைச்சராலும், பழனிவேல் தியாகராஜனாலும் இதை செய்ய முடியுமா? அவர்களால் முடியாது. ஆனால் எனக்கு அந்த துணிவும் தைரியமும் இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான் இயேசு நாதர் இல்லை என்பதை கூறி விட்டார். ஆனால் நிச்சயமாக யூதாஸ் தான் என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும் என பதிவிட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் @annamalai_k தான் இயேசு நாதர் இல்லை என்பதை கூறி விட்டார், ஆனால் நிச்சயமாக யூதாஸ் தான் என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.
— Mano Thangaraj (@Manothangaraj) September 1, 2022