ராஜகோபாலன் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளது- சங்கர் ஜிவால்..!

பாலியல் புகாரில் கைதான ஆசிரியர் கோபாலன் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளது என சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசித்து வந்த ஆயுதப் படை தலைமைக் காவலர் சதீஷ் பாபு என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சங்கர் ஜிவால், அனைத்து போக்சோ வழக்குகளும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றன.
பாலியல் புகாரில் கைதான ஆசிரியர் கோபாலன் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளது என தெரிவித்தார். பாலியல் புகாரில் யார் பாதிக்கப்பட்டிருந்தாலும் உடனடியாக புகார் அளிக்கலாம். பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். பத்மா சேஷாத்ரி பள்ளியில் இன்னும் இருவர் புகார் அளித்துள்ளனர்.
சமூக வலைதளங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் மூலமாக புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறையில் ஆசிரியராக பணியாற்றிய ராஜகோபாலன் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டது. மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
மாணவிகளிடம் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைந்ததுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025