மின்சாரத்துறை மீது 1.59 லட்சம் கடன் இருக்கிறது.! ஆண்டுக்கு 16 ஆயிரம் கோடி வட்டி.! தமிழக அமைச்சர் தகவல்.!
தமிழக மின்சாரத்துறை மீது 1.59 லட்சம் கோடி கடன் இருக்கிறது எனவும், அதற்காக கடந்த ஆண்டு மட்டும் 16,511 கோடி வட்டி கட்டப்பட்டுள்ளது. – தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.
இன்று முதல் மின்சார இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முகாம்கள் தொடங்கி தீவிரமாக இணைக்கப்பட்டு வருகின்றன. டிசம்பர் 31 வரையில் இந்த முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ஆதார் எண்ணை மின்சார இணைப்புடன் இணைத்தால் 100 மின்சாரம் இணைப்பு ரத்தாகிறது என்கிறது பொய்யான தகவல்.
ஆதார் எண்ணை இணைப்பதால், 100 யூனிட் மின்சார மானியம், சிறு குறு மின்சார மானியம், நெசவு, விசைத்தறி, கைத்தறி மின்சார மானியம் ஆகியவை பாதிக்கப்படாது.
இந்த கணக்கெடுப்பு என்பது யார் நுகர்வோர்கள், யார் மின்சார சலுகைகள் பெறுகிறார்கள், யார் தவறாக மின்சார மானியம் பெறுகிறார்கள் என்பதை கணக்கீடு செய்வதற்காகவே இந்த கணக்கெடுப்பு என விளக்கம் அளித்தார். இதுவரை 2.33 கோடி பயனர்களின் இதுவரை 15 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ள்ளனர் என கூறினார்.
மேலும் தமிழ்நாடு மின்சாரவாரியம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் 1.59 லட்சம் கோடி கடன் இருக்கிறது. அதற்காக கடந்த ஆண்டு மட்டும் 16,511 கோடி வட்டி கட்டப்பட்டுள்ளது எனும் அதிர்ச்சி தகவலையும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார் .