நான் பேசிய வார்த்தை தரக்குறைவான வார்த்தை இல்லை என்பதற்கு விக்கிப்பீடியாவில் விளக்கம் உள்ளது – எச்.ராஜா

Default Image

நான் பேசிய வார்த்தை தரக்குறைவான வார்த்தை இல்லை என்பதற்கு விக்கிப்பீடியாவில் விளக்கம் உள்ளது பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். 

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக செய்தியாளர் சந்திப்பின்போது, பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசியுள்ளார். இதனையடுத்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் இவருக்கு கண்டனம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடியில் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. அதன் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், செய்தியாளர்களுக்கு எதிராக நான் தவறான வார்த்தையை பயன்படுத்தவில்லை. அர்த்தம் புரியாமல் யாருக்காவது மனது புண்பட்டிருந்தால் அது வருத்தமான விஷயம்தான். நான் பேசிய வார்த்தை தரக்குறைவான வார்த்தை இல்லை என்பதற்கு விக்கிப்பீடியாவில் விளக்கம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்