பொன்முடிக்கு புதிய சிக்கல்… ஆளுநர் ரவியின் திடீர் டெல்லி பயணம்…
Ponmudi Case : தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது சொத்து குறிப்பு வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் இருவரும் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்தாலும், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பு அளித்து இருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதானா சிறை தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உத்தரவு வெளியானது.
Read More – சித்தராமையா கருத்து எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது… இபிஎஸ் கடும் கண்டனம்!
இதற்கிடையில் சிறை தண்டனை பெற்ற காரணத்தால் அவர் வகித்து வந்த அமைச்சர் பதவியை இழந்ததோடு, அவர் பொறுப்பில் இருந்த திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியானது காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது.
தற்போது உச்ச நீதிமன்றம் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட காரணத்தால் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி காலியான அறிவிக்கப்பட்ட உத்தரவானது நேற்று ரத்து செய்யப்பட்டது. மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் பொன்முடி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்க ஒப்புதல் வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.
Read More – பள்ளிகளுக்கு விடுமுறை.? வாகனங்களை பிடுங்கும் திமுக.? அண்ணாமலை காட்டம்.!
இந்த பரிந்துரை கடிதமானது நேற்று இரவு ஆளுநர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டது. இந்து சமயத்தில் தான் தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மூன்று நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு உள்ளார்.
இந்த பயணம் ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்தது என கூறப்பட்டாலும், பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்க முதல்வர் பரிந்துரை கடிதம் அளித்த மறுநாள் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலை வருகிறது. இதனால் பொன்முடி மீண்டும் அமைச்சராவதில் தற்போது சிக்கல் எழுந்துள்ளது.
Read More – காவேரி நீரை மத்திய அரசு கூறினாலும், தமிழக அரசு கேட்டாலும் தர மாட்டோம்.! சித்தராமையா திட்டவட்டம்.!
மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணத்தில், மத்திய உள்துறை அமைச்சகத்தை சந்தித்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் குறித்தும், பொன்முடி மீண்டும் அமைச்சராவது சாத்தியமா என்பது குறித்தும் சட்ட ஆலோசனைகளை பெற உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் உள்துறை அமைச்சகத்தின் சட்ட ஆலோசனை என்ன சொல்கிறது என்பதை பொறுத்து தான், வரும் சனிக்கிழமை தமிழகம் திரும்பும் ஆளுநர் ஆர்.என்.ரவி, பொன்முடிக்கு அமைச்சர் பதவி பிரமாணம் செய்து வைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.