‘பொங்கல் வரை மழைக்கு வாய்ப்புள்ளது’… பருவமழை எப்போது விலகும்? – பாலச்சந்திரன் தகவல்!

இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பருவமழை அதிகளவில் பெய்துள்ளது என்று தென் மண்டல வானிலை ஆய்வாளர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Balachandran imd

சென்னை: வடகிழக்கு பருவமழை 2024 ஆம் ஆண்டில் இயல்பைவிட 33% கூடுதலாக பதிவாகியுள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை எந்த மாவட்டத்திலும் இயல்பைவிடக் குறைவாக பெய்யவில்லை. இந்த ஆண்டு கடந்தாண்டைவிட 27 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியிருக்கிறது.

6 மாவட்டங்களில் மிக அதிகம், 23 மாவட்டங்களில் அதிக மழையும், 11 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும் மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில், அக்டோபர் மாதத்தில் 214 மி.மீ, நவம்பர் மாதத்தில் 140 மி.மீ, டிசம்பர் மாதத்தில் 235 மி.மீ என வடகிழக்கு பருவமழை காலத்தில் மொத்தமாக 590 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது.

இதில், தென்மேற்கு பருவமழை 18 சதவீதமும், வடகிழக்கு பருவமழை 33 சதவீதமும் பெய்துள்ளது ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 1,171 மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பருவமழை அதிகளவில் பெய்துள்ளதாகவும், இந்த ஆண்டில் 4 புயல்கள் உருவானதாகவும், கடந்த ஆண்டு 6 புயல்கள் உருவானதாகவும் கூறினார்.

மேலும், வடகிழக்கு பருவமழை நிறைவு பெறவில்லை. தமிழ்நாட்டில் பொங்கல் வரை மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்பிறகு வட கிழக்கு பருவமழை விலகும் என்றும் கூறியதோடு, பொங்கல் பின்னரே பருவமழை விலகுவைது குறித்து முழுமையாக அறியமுடியும்” என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

03012025 LIVE
Coimbatore LPG Accident
Rasakulla (1)
Chengalpattu Collector Arunraj IAS speech about One person fire himself
Minister MRK Pannerselvam scold his assistant in Tanjore meeting
IND vs AUS 5th test Day 1
DMK MP Kathir Anand - DMK Minister Duraimurugan