அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை? வானிலை ஆய்வு மையம் அப்டேட்!
இன்று காலை 10 மணி வரையில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மண்டலம் தெரிவித்துள்ளது.
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது ஃபெங்கல் புயலாக மாறும் என கூறப்பட்டிருந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து வருவதால் புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துவிட்டது.
இருந்தாலும், காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழகம் நோக்கி நகர்ந்து நாளை காலை கரையை கடக்க உள்ளதால், நாளை வரையில் வடதமிழக பகுதியில் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது 9கிமீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று (நவம்பர் 29) காலை 10 மணி வரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை மற்றும் திருவள்ளூரில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மண்டலம் தகவல் தெரிவித்துள்ளது.