13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் நேற்று திடீரென பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைபெய்து வெயிலின் தாக்கத்தை சற்று குறைத்துள்ளது.
அதே போல இன்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, கோவை, நீலகிரி, ஈரோடு, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி
ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருபப்தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துளளது.
அதே போல, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.